வேண்டவே வேண்டாம்! டிவிட்டரில் தீபிகா படுகோனை கெஞ்சி வரும் ரசிகர்கள்!
பாலிவுட்டின் முன்னனி நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் பாலிவுட் பட இயக்குனர் லூவ் ராஜன் கம்பெனியின் வெளியில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இதனை கண்ட தீபிகா ரசிகர்கள், டிவிட்டரில் #NotMyDeepika எனும் ஹேஸ்டேக் மூலம் அவரது படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி வருகின்றனர்.
லூவ் ராஜன் ஏற்கனவே பாலியல் புகாரான MeToo எனும் புகாரில் சிக்கியவர். தீபிகா பாலியல் குற்றத்திற்கு எதிராக பேசி வருகிறார். ஆதலால் இவரது படத்தில் நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் தீபிகாவிடம் கெஞ்சி வருகின்றனர்.