இயக்குனர் ராஜமௌலி, தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த ராஜமௌலி, பாகுபலி 1 & 2 படங்களுக்கு பின்னர் இந்தியாவின் முன்னணி இயக்குனராக தன்னை நிரூபித்து விட்டார்.
இவருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டுள்ளார்.
அவரது இயக்கத்தில் RRR திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரகனி என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருக்கிறது.
unknown node