நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் தளபதி பட நடிகை!

நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கொலைகாரன் திரைப்பாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஏ.செந்தில்குமார் இயக்கத்தில், உருவாகி வரும் ‘காக்கி’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இவர் தளபதி விஜய் அவர்களின் பிகில் படத்தில் கால்ப்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025