மிரட்டலான 'அனகோண்டா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.!

இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது.

Anaconda

சென்னை :‘அனகோண்டா’ (Anaconda) படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது

இயக்குநர் டாம் கோர்மிகன் இயக்கத்தில், பிராட் புல்லர், ஆண்ட்ரூ ஃபார்ம், கெவின் எட்டன் மற்றும் டாம் கோர்மிகன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் தாண்டிவே நியூட்டன், பால் ரட், ஜாக் பிளாக், ஸ்டீவ் ஸான் ஆகியோர் நடித்துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ள ‘அனகோண்டா’ படத்தின் டிரெய்லர், கிளாசிக் சர்வைவல்-த்ரில்லரை வழங்குகிறது. ட்ரெய்லரை வைத்து பார்க்கும் பொழுது, இந்தப் படம், நகைச்சுவை, சாகசம் மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

மேலும், ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது, மேலும் இது ஒரு ஃபிரான்சைஸ் பாணியில் பரபரப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.