“ஏங்க.. நான் படத்துல இருக்கேன்.. என்னை விடுங்க ப்ளீஸ் அண்ணா” – நடிகை ஸ்ருதி காமெடி.!

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 'கூலி' படம் FDFS பார்க்கச் சென்ற நடிகை ஸ்ருதி ஹாசன் செய்த அரட்டை காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ShrutiHaasan - CoolieFDFS

சென்னை :கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்தைத் தவிர, நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான் போன்ற நடிகர்களும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் நேற்றைய தினம் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன், ‘கூலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) பார்க்க குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு சென்றபோது, ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியதால், “ஏங்க.. நான் படத்துல இருக்கேன்.. என்னை விடுங்க ப்ளீஸ் அண்ணா” என்று கூறிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலான வீடியோவில், ஸ்ருதி ஹாசன் தனது ‘கூலி’ படத்தைப் பார்க்க சென்னையின் வெற்றி என்கிற தியேட்டருக்கு சென்றார். அப்பொழுது, அவரது கார் தியேட்டரை நோக்கி நகரத் தொடங்கியவுடன், ஒரு பாதுகாவலர் அவரைத் தடுத்து நிறுத்தினார். ஸ்ருதியும் அவரது நண்பரும் இதைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். ஸ்ருதி வீடியோவில், ‘நான் படத்தில் இருக்கிறேன். தயவுசெய்து என்னை வர விடுங்கள் அண்ணா. நான்தான் ஹீரோயின் சார்’ என்று கூறுகிறார்.

unknown node