நடிகர் அஜித் நடித்து வரும்“துணிவு”திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
unknown nodeChillaChillaFromToday [Image Source: Twitter ]
இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில். இதனை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான“சில்லா சில்லா”பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. அதன்படி, தற்போது அந்த பாடலை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை ராக்ஸ்டார் அனிருத் பாடியிருக்கிறார். பாடலை வைசாக் என்பவர் எழுதியுள்ளார்.
unknown nodeChillaChilla From Thunivu [Image Source: Twitter ]
பாடலை கேட்கையில், பாடலில் வரும் பீட் மற்றும் வரிகள் அனைத்தும் நம்மளை இதற்கு முன்பே வெளியான“ஆலுமா டோலுமா”பாடலின் நினைப்பிற்கு கொண்டு சென்றுள்ளது. அந்த அளவிற்கு சூப்பரான குத்து பாடலை ஜிப்ரான் அஜித்துக்காக கொடுத்துள்ளார். இது தான் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 50-வது படமும்.
இதையும் படியுங்களேன்-படுக்கைக்கு அழைத்தால் நான் இதைத்தான் செய்வேன்.! ரெம்ப ஓப்பனாக பேசிய கீர்த்தி சுரேஷ்.!
unknown nodePartyWithChillaChilla [Image Source: Twitter ]
மேலும், இன்று“துணிவு”படத்தின் பாடல் தான் வெளியாகியுள்ளது. ஆனால், அஜித் ரசிகர்கள் துணிவு படமே வெளியானது போல திரையரங்குகளில் டிக்கெட் எடுத்து மேளம் அடித்து நடனமாடி கொண்டாடி வருகிறார்கள். அப்போ கண்டிப்பாக படம் வெளியாகும் சமயத்தில் எந்த அளவிற்கு கொண்டாட்டம் இருக்கும் என்பதை யோசிக்கவே முடியவில்லை. மேலும் இன்று வெளியான இந்த சில்லா சில்லா பாடல் என்ன சாதனையெல்லாம் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
unknown node