சென்னை :பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி தான், கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக குக் வித் கோமாளி பிரபலங்களான, மணிமேகலை VTV கணேஷ், சுனிதா ஆகியோருடைய பெயர் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.
அந்த வரிசையில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சச்சனா நமிதாஸ் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி வேண்டும் என்றால் ஒவ்வொரு சீசன்களிலும், அந்த ஆண்டுகளில், அறிமுகம் ஆகி ட்ரெண்டிங்கில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு வர நினைப்பார்கள்.
குறிப்பாக, கடந்த சீசனில் கூட படங்களை ப்ரோமோஷன் செய்து யூடியூப் ஸ்டார் என்ற பட்டத்தை வாங்கிகொண்ட கூல் சுரேஷை விஜய் தொலைக்காட்சி தேர்வு செய்து களமிறங்கியது. அவரை தொடர்ந்து இந்த சீசன், மகாராஜா படத்தின் மூலம் சச்சனா நமிதாஸ் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். எனவே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வர விஜய் தொலைக்காட்சி பேசி வருகிறது.
அவருடைய வயது 21-ஆக இருந்தாலும் இளமையான வயதிலே அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு வந்துள்ளது. இதன் காரணமாக, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இன்னும் பிரபலமாகவும், சச்சனா நமிதாஸ் திட்டமிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உண்மையில், அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
