பிக் பாஸ் சீசன் 8 எலிமினேஷன் : வீட்டை விட்டு வெளியேறும் அந்த போட்டியாளர்?
தர்ஷா குப்தா, அர்னவ் இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தாலும் மற்றொரு பக்கம் எலிமினேஷன் சுற்று மும்மரமாக நடைபெற்று வீட்டை விட்டு ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஒரு போட்டியாளர் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த முதல் எலிமினேஷன் சுற்றில் போட்டியாளர் ரவீந்திரன் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்.
அவரை தொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் அதிகமாக இருந்த நிலையில், நிகழ்ச்சியை விட்டு அர்னவ் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் தர்ஷா குப்தா, ஜெஃப்ரி, தீபக்,சௌந்தர்யா, ஜாக்குலின், ரஞ்சித், சஞ்சனா மற்றும் முத்துக்குமரன், அர்னவ், விஜே விஷால், உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்று இருந்தார்கள். இவர்கள் பத்து பேரில் மக்களின் ஆதரவு விஜே விஷாலுக்கு அதிகமாக இருப்பதால் அவர் அதிகமான வாக்குகளைப் பெற்று எலிமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார்.
இருப்பினும், நாமினேஷன் பட்டியலில் குறைவான வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு முதல் ஆளாக வெளியேறுவார். முன்னதாக வெளியான தகவலின் படி, தர்ஷா குப்தா, அர்னவ் இருவரும் குறைவான வாக்குகளைப் பெற்று டேஞ்சர் ஜோனில் உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில், வெள்ளிக்கிழமை வரை தான் மக்கள் ஒட்டு அளிக்க முடியும். அதற்கு அடுத்தபடியாக ஒட்டு அளிக்க முடியாது. எனவே, இதுவரை பதிவான ஓட்டுக்களை வைத்துப் பார்க்கையில், மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விட்டு அர்னவ் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தன்னை எதிர்க்கும் போட்டியாளர்களிடம் கடுமையாகச் சண்டைபோடுவேன் சிறப்பாக கேம் விளையாடுவேன் எனக் கூறிவிட்டு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்ற காரணத்தால் தான் அவருக்கு மக்கள் குறைவாக வாக்கு அளித்துள்ளனர். இதன் காரணமாக அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025