இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeVijay Cute Smile [Image Source: Twitter/Cinebloopers]
இதற்கிடையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் விஜய், குஷ்பூவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகான செல்ஃபி ஒன்று எடுக்கிறார். மற்றோரு புகைப்படத்தில் விஜய் தனது கையில் கேமராவுடன் சந்தைக்குள் செல்கிறார்.
unknown nodeVijay And Kushboo And Rashmika Mandanna [Image Source: Twitter/Cinebloopers]
மற்றோரு புகைப்படத்தில் விஜய் மற்றும் வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி இருவரும் படப்பிடிப்பு தளத்தில் பேசுக்கொண்டிருக்கிறார்கள். இந்தபுகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அனைவரும் விஜய் அண்ணாவின் ஸ்டைல் லுக் சூப்பர் என கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்-ஆக்ரோஷமான கேங்ஸ்டர் படத்தில் அஜித்.! ஆனால் இயக்குனர் இவரா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
unknown nodeVijay Cute Smile [Image Source: Twitter/Cinebloopers]
மேலும், வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என காத்திருந்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கும் ஒரு சூப்பரான தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், வாரிசு படத்தின் முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node