பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவி 10 வருடங்கள் பிறகு மீண்டும் சீரியலில்

This news gives information about Balu Mahendra's second wife was back in serial after 10 years-balu mahaendravin irantavathu

10 வருடங்களுக்கு முன் “சொர்க்கம்” என்ற சீரியலில் நடித்தவர். தற்போது விரைவில் வரவிருக்கும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில்மீண்டும் நடிக்கவுள்ளார்.

நடிகை மவுனிகா இவர் 1985-ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான “உன் கண்ணில் நீர் வழிந்தால்” படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் அமராவதி, மே மாதம், சுபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அதன் பிறகு  சொந்தம், சொர்க்கம் பாலு மகேந்திரா கதை நேரம், ஆனந்தம் விளையாடும் வீடு, கலாட்டா குடும்பம் ஆகிய  பல  சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.

இந்நிலையில் மீண்டும்  பானா காத்தாடி திரைப்படத்தில் அதர்வாவிற்கு அம்மாவாக நடித்தார். பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார்.8 ஆண்டுகளுக்குப் பிறகு  கார்த்தி நடித்த  “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன் “சொர்க்கம்” என்ற சீரியலில் நடித்தவர். தற்போது விரைவில் வரவிருக்கும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில்மீண்டும் நடிக்கவுள்ளார்.

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவி மவுனிகா என்பது குறிப்பிடத்தக்கது.

பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவி 10 வருடங்கள் பிறகு மீண்டும் சீரியலில்