பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தின் பணியை வேகப்படுத்தியிருக்கும் பாலா குற்றப்பரம்பரை படத்தையும் இயக்க உள்ளாராம்.வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை பாலா இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் திடீரென்று பாரதிராஜா அதே கதையை மையமாக வைத்து படம் இயக்கி நடிப்பதாக தடபுடலாக படப்பிடிப்பு தொடங்கினார்.
unknown nodeஆனால் சில மாதங்களில் அதன் படப்பிடிப்பு தொடராமல் நிற்கிறது. பாரதிராஜா இப்படத்தை அறிவித்தபோதிலும் குற்றப்பரம்பரை படத்தை இயக்கியே தீருவேன் என்று பாலா தெரிவித்திருந்தார்.
unknown nodeநாச்சியார் படத்துக்கு பிறகு அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் நடித்த படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்க உள்ளார் பாலா. இதில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதன்பிறகு குற்றப்பரம்பரையை படமாக்கஇருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அனுஷ்கா போன்ற ஸ்டார்களை இணைத்து பாலா படம் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. அதில் தற்போது விக்ரம் வேதா படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்க உள்ளாராம். அநேகமாக இப்படம் குற்றப்பரம்பரையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.source:www.dinasuvadu.com