மாரி 2  படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்…!

Default Image

மாரி 2  படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த திரைப்படம் மாரி. இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தில் காமெடி, ஆக்ஷன் என படம் நல்ல எண்டெர்டயின்ட் மூவியாக அமைந்தது. படத்தில் காஜல் ஹீரோயினாக நடித்திருந்தார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இபபடத்தையும் பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும், கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.இதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  .மேலும்  2.0 திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்