பிறப்பால் கிறிஸ்தவர்.. தற்போது கோவில் கோவிலாக சாமி தரிசனம் செய்யும் நயன்தாரா.!

சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகை நயன்தாரா, நயன்தாரா கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் என்றாலும், குரியன் கொடியட்டு மற்றும் ஓமனா குரியன் ஆகியோருக்கு கேரளா மாநிலம் திருவல்லா நகரத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.
டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்ட அவர் பிறப்பால் கிறிஸ்தவர். காலப்போக்கில் சினிமாவுக்கு வந்ததால் தனது பெயரை நயன்தாரா என மாற்றிக்கொண்டார். ஆனால், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது கிறிஸ்தவராகவே வளர்ந்தார்.
பின்னர், 2011ஆம் ஆண்டு சென்னையில் அவர் தன்னை இந்து மதத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது இந்து மதத்திற்கு மாறிய நயன்தாரா, இது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்றுகூறிஉள்ளார்.
இந்நிலையில், அன்று முதல் இன்று வரை தவறாது கோயில் கோயிலாக சென்று வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது ஒரு நாளைக்கு ஒரு கோவில் சென்று வந்த அவர், இன்று ஒரே நாளில் பல கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
ஆம், அதன்படி இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தனது கணவர் விக்னேஷ் சிவன் தரிசனம் செய்த நயன்தாரா, இதையடுத்து குமாரி பகவதி அம்மன் கோவில் மற்றும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு என்று சிறப்பு தரிசனம் செய்தார்.
இறுதியாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் தரிசனம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
My Birthday Memories ????
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில், கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை
நயன்தாரா சாமி தரிசனம்#naynthara #actressnayanthara #vigneshsivan pic.twitter.com/9WWTd7gWYD— ᴠ.ᴍᴀɴᴏᴊ ᴋᴜᴍᴀʀ ˡᵉᵒ????ツ❁ (@manoj_velusamy1) May 14, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025