நடிகர்தனுஷ்நடிப்பில் அடுத்ததாகஅசுரன்படம் வெளியாக உள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர்வெற்றிமாறன்இயக்கியுள்ளார். கலைபுலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.ஜிவி பிரகாஷ்குமார்இசையமைத்துள்ளார்.
unknown nodeஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் படத்தில் நடித்தமஞ்சு வாரியார், நடிகர் கருணாஸின் மகன் கென், ஆடுகளம் நரேன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய இயக்குனர்வெற்றிமாறன், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்தனர் எனவும், படம் வேகமாக வளர்ந்தது என்பதால் இயக்குனர்மணிமாறன்(புகழ்,உதயம்பட இயக்குனர்) சில காட்சிகளை ஷுட் செய்து தருவார் எனவும், தனது உதவி இயக்குனர்கள் தனக்கு பெரிதும் உதவினர் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
unknown nodeஒளிப்பதிவாளர்வேல்ராஜ்(வேலையில்லாபட்டதாரிபடத்தை இயக்கியவர்) கூறுகையில் அசுரன் படத்திற்கு கண்டிப்பாக அடுத்த வருடம்தேசியவிருதுகிடைக்கும் என குறிப்பிட்டார். நடிகைமஞ்சுவாரியர்பேச்சுகளில், தமிழில்அசுரன்படம் மூலம் அறிமுகம் ஆனது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். என குறிப்பிட்டார்.
நடிகர் தனுஷும் இயக்குனரையும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் பாராட்டி பேசினார்.