நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து அசுரன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
unknown nodeஇப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தனுஷ் – வெற்றிமாறன் – ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும், பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. ஆதலால், இப்பாடலை கானா மியூசிக் (gaana) நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeமேலும், இப்படத்திலிருந்து நேற்று இரண்டு போஸ்டர்கள் வெளியாகின. இதில் நடிகர் தனுஷ் அந்த காலத்து இளைஞர்கள் போல மீசை வைத்து வேறொரு தோற்றத்தில் உள்ளார். இன்னொரு போஸ்டரில் ஆக்ரோஷமாக உள்ளார். இந்த போஸ்டர்கள் வெளியாகி தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது. இப்படமானது ,அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.