இயக்குனர் முருகதாஸ் சர்கார் படம் குறித்து ருசீகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
unknown nodeஅந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் படம் குறித்து ருசீகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில்,சர்கார் படத்தில் விஜய்-ன் கதாபாத்திர பெயர் சுந்தர் ராமசாமி.அதேபோல் சர்கார் அரசியல் படம்தான்.ஆனால் சர்கார் படம் எந்த அரசியல் தலைவர்களையும் கேலி பேசாமல், மக்கள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனும் கருத்தை அடிப்படையாய் கொண்ட அரசியல் படம் என்று கூறியுள்ளார்