இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்”.இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால், படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிப்பதாக தகவல்கள் மட்டும் பரவி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது “ஜெயிலர்” படப்பிடிப்பில் சிவ ராஜ்குமார் இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
unknown node