தமிழ் சினிமாவில் 3 என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அறிமுகமானவர் அனிருத். இதுவரை தமிழில் 26 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுகிறது. இவரது பின்னணி இசைக்கு மட்டும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
unknown nodeதொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களுக்கு தான் இசையமைத்து வருகிறார். ரஜினியிலிருந்து சிவகார்த்திகேயன் வரை, அணைத்து டாப் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்துவிட்டார். கமலின் நடிப்பில் இன்று வெளியான விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார்.
unknown nodeஇப்படி, தமிழில் டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அனிருத் தற்போது பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார். ஆம் பாலிவுடின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், பாலிவுட்டில் களமிறங்கிய அனிருத் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” கனவுகள் நனவாகும்.! பாட்ஷாவுக்கே இசையமைக்கிறேன் நன்றி ஷாருக்கான் சார். நன்றி மற்றும் என் சகோதரன் அட்லீயை நினைத்து பெருமை கொள்கிறேன் மேலும் இது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் ஜவான் டீசர் இதோ தயவுசெய்து எங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கவும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
unknown node