ஒரே பதிலால் ஒட்டுமொத்த தல ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் ஆண்ட்ரியா . இவர் அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை என பல படங்களில் நடித்தார்

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் ஆண்ட்ரியா . இவர் அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை என பல படங்களில் நடித்தார்.

ஆனால்,தரமணிபடம் தான் ஆண்ட்ரியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தது, இப்படம் இவரின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு மாணவர்கள் அனைவரும் ‘உங்களுக்கு தல பிடிக்குமா, தளபதி பிடிக்குமா?’என்று கேட்டனர்.

அதற்கு ஆண்ட்ரியா சற்றும் யோசிக்காமல்‘தல தான்’என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது, ஆனால், இவை விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது.

விஜய்யுடன் ஆண்ட்ரியா கூகுள் கூகுள் பாடலை இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆண்ட்ரியா இனி ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீப காலமாக பேசி வருகின்றார்