ஆண்டவர் தரிசனம் 50 முறை..."விக்ரம்:" படம் பார்த்து உலக சாதனை படைத்த கமல் ரசிகர்..!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம்  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம்  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம்.

unknown node

படம் வெளியாகி 100 நாட்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படம் 100 நாட்களை கடந்ததையொட்டி கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதையும் படியுங்களேன்-பத்தல…பத்தல… சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய ஆண்டவர்.!

unknown node

இந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தை 51 முறை தியேட்டரில் பார்த்து உதய பாரதி எனும் இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை “லிங்கன் புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில்” இடம்பிடித்திருக்கிறது. இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

unknown node

இது தொடர்பான வீடியோக்களை தந்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள உதய பாரதி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் ” நான் சிறிய வயதிலிருந்தே கமல்ஹாசனின் தீவிர ரசிகர். அதிக முறை விக்ரம் படத்தை பார்த்து சாதனை செய்ய வேண்டும் என்று எல்லாம் என் ஆசை இல்லை. நம்முடைய விக்ரம் படத்தை ஒரு ரசிகர் 50 முறை தியேட்டரில் பார்த்துள்ளானா? யார் அவன் என கமல் சார் ஒரு நிமிஷம்  திரும்பிப் பார்ப்பார் இல்லையா? அதுக்காகத்தான் இந்த முயற்சி என” விருது பெற்றவுடன் பேசியுள்ளார்.