தமிழில் ரீமேக்காகும் அமிதாப் பச்சனின் "பிக்கு".!தீபிகா படுகோனேவுக்கு பதிலாக திரிஷா.!

Trisha is said to be starring in the Tamil remake of the 2005 film piku starring Amitabh Bachchan and Deepika Padukone.

அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே நடித்த பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா நடிப்பில் ராங்கி மற்றும் ஷுகர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெற்றி பெற்ற “பிக்கு” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த 2015-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் கான் உள்ளிட்ட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான “பிக்கு” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வாங்கியுள்ளதாகவும் ,இந்த படத்தில் தீபிகா படுகோனே நடித்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகவும், முன்னணி நடிகர் ஒருவருடன் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமிதாப் பச்சனின் “பிங்க்” திரைப்படம் தமிழில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டு அதில் அஜித் நடித்தது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த படத்திலும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.