விடாமுயற்சிக்கு கிடைத்த விடுதலை.. நாளை ஏகேயின் மாஸ் என்ட்ரி.!

VidaaMuyarchi

நடிகர் அஜித் தற்போது “குட் பேட் அக்லி” மற்றும் “விடாமுயற்சி” ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் ஒன்னு கூட வெளியிடாமல் உள்ளது. ஆனால், ஒரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரனின் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடந்தது. படத்தின் டைட்டில் தொடர்ந்து இதுநாள் வரை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை தவிர, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித் தொடர்புடைய  காட்சிகள் மட்டும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா,  இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாளை (ஜூன்30ம் தேதி) மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். இது ஒருவேளை அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அஜித்துடன் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ரெஜினா கசாண்ட்ராவும் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்