AK- SK திடீர் சந்திப்பு.! இணையத்தை அதிர வைத்த அல்டிமேட் புகைப்படம்..!

நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர்

நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை  நேரில் சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திடீரென அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளது என் என பலரும் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் பல பேட்டிகளில் அஜித் தனக்கு பல அறிவுரைகளை கூறியதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன்-நிஜ காவல்துறை அதிகாரியாகவே மாறி மாஸ் காட்டிய தமிழ் டாப் ஹீரோக்கள்… லிஸ்ட் இதோ.!

மேலும் இந்த திடீர் சந்திப்பு படத்திற்கான சந்திப்பு இல்லை என்றும், மரியாதையை நிமர்த்தமாக நடந்த ஒரு சந்திப்பு என்றும் கூறப்படுகிறது. புகைப்படத்தில் அஜித் துணிவு படத்தின் கெட்டப்பிலும், சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் கெட்டப்பிலும் இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார். அப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்கமுடியாத  நடிகராக வளர்ந்துவிட்டார். அவருடைய வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node