வணிக ரீதியில் அஜித்தின் சிறந்த படம் விஸ்வாசம்....KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ்...!!

பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின்

பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது பேட்ட விஸ்வாசம் படம் நல்ல வசூலை குவித்துள்ளது.

இது குறித்து KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ் தெரிவிக்கையில் , விஸ்வாசம் படம் வெளியாவதற்கு முன்பு இருந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.ஒவ்வொரு_வரும் பலமுறை விஸ்வாசம் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கின்றனர்.தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் படம் 125 கோடி வசூல் செய்து அனைவரின் எதிர்பார்ப்பையும் மிஞ்சியது.விஸ்வாசம் படம் வணிக ரீதியில் நடிகர் அஜித்_தின் சிறந்த படமாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.