ரீ ரிலீஸான தீனா...திரையரங்கிற்குள் பட்டாசு கொளுத்திய அஜித் ரசிகர்கள்!

Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

Dheena Re Release

Dheena Re Release:நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

நடிகர் அஜித் குமார் இன்று (மே 1 ) தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த கொண்டாட்டத்தின்போது, அவரது பழைய படங்களில் ஒன்றான தீனா மீண்டும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தை காண ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க, ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து தீனா படத்தைக் கொண்டாடி சம்பவம் அரங்கேரியுள்ளது.

ஆம், தீனா படம் தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் முதல்காட்சியைக் காண வந்த அஜித் ரசிகர்கள் உற்சாகம் மிகுதியால் தியேட்டரின் உள்ளேயே பட்டாசுகளை கொளுத்தினர்.

இதனால், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியான நிலையில், திரையரங்க ஊழியர்களை வந்து நிலைமையை சீர் செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

unknown node

அந்த வீடியோவில், படத்தில் வரும் வத்திக்குச்சி படிக்காதுடா பாடல் திரையில் ஒலித்துக் கொண்டிருந்த போது, ​​ரசிகர்கள் இருக்கையில் இருந்து இறங்கி நடனமாடத் தொடங்கினர்.ஒரு கட்டத்தில், பட்டாசுகளுக்கு தீ வைக்க, தீப்பொறிகள் மற்றும் புகை மூட்டம் அறை முழுவதும் பரவியது தெரிகிறது.

ரீ ரிலீஸான தீனா...திரையரங்கிற்குள் பட்டாசு கொளுத்திய அஜித் ரசிகர்கள்!