4 தேசிய விருதுகளை வென்ற "ஐயப்பனும் கோஷியும்".! யார்..? யாருக்கு என்னென்ன விருது..?

மறைந்த இயக்குனர் சச்சிதானந்தனா இயக்கத்தில் பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் "ஐய்யப்பனும் கோஷியும்".இந்த படம்

மறைந்த இயக்குனர் சச்சிதானந்தனா இயக்கத்தில் பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “ஐய்யப்பனும் கோஷியும்”.இந்த படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

unknown node

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற ‘கலகாத்தா’ பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

unknown node

இந்த நிலையில், டெல்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

unknown node

இதில் ஐய்யப்பனும் கோஷியும் திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது. அதன்படி, சிறந்த இயக்குநர் –  கே ஆர் சச்சிதானந்தன், சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன், சிறந்த ஸ்டண்ட் அமைப்பு – ராஜசேகர், மாபியா சசி சிறந்த பின்னணி பாடகி (கலகாத்தா பாடல்) பாடிய நஞ்சம்மா உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.