டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயப் ரவி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்க பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து அப்படத்தின் தொலைகாட்சி உரிமையை வாங்கிவிட்டது. இன்னும் இப்படத்தின் வெளியீட்டு தேதி கூட குறிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
DINASUVADU