தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனையடுத்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்,புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வலிமை என தலைப்பு வைத்துள்ளனர். ஸ்ரீதவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில், அவரது மகள் ஜான்விகாபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த துவங்கவுள்ளதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வலிமை படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நஸ்ரியா தனது தலைமுடியை குட்டையாக வெட்டியா நிலையில், இந்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வலிமை என்று ஹேஸ்டேக் போட்டுள்ளார்.
unknown nodeநடிகை நஸ்ரியா அஜித்தின் தல 60 படத்தில் நடிக்கிறாரா?
????♀️ Something New on this day ???? #Valimai pic.twitter.com/uNQ3ME5yVE