மீண்டும் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை கரீனா கபூர்.! குவியும் வாழ்த்துக்கள்.!

Bollywood couple Kareena Kapoor and Saif Ali Khan have given birth to a baby boy again.

பாலிவுட் தம்பதியினரான கரீனா கபூர் மற்றும் சயிப் அலிகானுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதியினர் கரீனா கபூர் மற்றும் சயிப் அலிகான்.கடந்த 2012-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினருக்கு முதலில் தைமூர் அலி என்ற ஆண் குழந்தை பிறந்தது.அதனை தொடர்ந்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் மீண்டும் தான் கர்ப்பமாக உள்ளதாகவும் , தங்களது இரண்டாவது குழந்தைக்கு காத்திருப்பதாகவும் அறிவித்திருந்தார்கள் .

இந்த நிலையில் நேற்று கரீனா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் ஆண்குழந்தை பிறந்துள்ளதாக சயிப் அலிகான் அறிவித்துள்ளார்.குழந்தையும் ,சேரும் நலமாக இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.மீண்டும் ஆண்குழந்தைக்கு பெற்றோரான சயிப் மற்றும் கரீனா கபூருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.