விவேக்கின் உடலுக்கு நடிகர் சூர்யா, ஜோதிகா நேரில் சென்று அஞ்சலி...!

Actor Surya and his wife Jyotika paid their last respects to actor Vivek's body.

நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதனையடுத்து, நடிகர் விவேக்கின் பூத உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிற நிலையில், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். அன்னாரது உடல் மாலை 5 மணிக்கு அடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.