சென்னை, பெருங்குடியில் அவரவர் பட ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகர் சூர்யாவும். விஜயும் சந்தித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜயும், சூர்யாவும். இருவரும் திரைக்கு வந்த புதிதில் இருந்தே நல்ல நண்பர்கள். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தில் இன்னோர் முதன்மை நாயகனாக தளபதி விஜயும் நடித்திருப்பார்.
unknown nodeஇருவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை, பெருங்குடியில் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதே வேளையில், சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.
இதனை அறிந்த இருவரும் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த சந்திப்பின் போது எந்த வித போட்டோக்களும் எடுக்கப்படவில்லையாம். அப்படி எடுத்திருந்தால், அது அவர்களின் கெட்டப் கசிய வாய்ப்பிருக்கிறது என்பதால் எடுக்காமல் விட்டுவிட்டார்களா? அல்லது, போட்டோ எடுத்துவிட்டு, படம் ரிலீஸ் ஆனதும் ரிலீஸ் செய்துவிடலாம் என வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை.