ஒரு RRR, KGF-ஐ வைத்து தமிழ் சினிமாவை எடை போடக்கூடாது.! – அமீர்

இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஆதார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது

இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஆதார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது விழாவில், அமீர், பாரதி ராஜா, அருண் பாண்டியன், தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

unknown node

அப்போது பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் ” தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது என்றால், எல்லா மொழிகளின் படமும் இன்று தமிழ்நாட்டில் கொடி கட்டிப்பறக்கிறது. சமீபத்தில் வந்த விஜய் படமோ இல்ல அஜித் படமோ சினிமாவிற்கு செலவு பண்றது இல்லை.

unknown node

தனக்கு செலவு பன்றாங்க.. 90% சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அப்போம் எப்படி படம் எடுக்க முடியும்.?கண்டிப்பாக எடுக்க முடியாது. நாங்கள் படம் எடுக்கும் போது 10% சம்பளம் பெற்றோம், 90% படத்திற்கு போகும். முந்திய காலகட்டத்தில் நம்ம கதையில் வெற்றிபெற்றோம்..ஒரு மேக்கிங்கில் வெற்றிபெற்றோம்,இப்போ எல்லா இடத்திலையும் பின் தங்கிட்டு இருக்கோம்” என பேசியிருந்தார்.

unknown node

அடுத்ததாக மேடையில் பேசிய இயக்குனர் அமீர் அருண்பாண்டியன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அமீர் கூறியது ” அருண்பாண்டியன் சார் பேசும்போது பல கருத்துக்களை கூறினார். தமிழ் சினிமா மீதான கோபத்தை கூறினார். நடிகர்களின் சம்பளத்தை கூறினார். ஆரம்ப காலகட்டத்தில் அவர் தயாரிப்பாளராக இருந்தார் அது அவருடைய பிரச்சினை. அதைப்பற்றி நான் பேசவில்லை.

unknown node

அவர் பேசும் போது தவறுதலாக ஒரு வார்த்தை கூறினார். தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின்தங்கியிருப்பதாக கூறினார். அதை ஏற்க மறுக்கிறேன். இந்திய சினிமாவிற்கே முன்னோடி தமிழ் சினிமாதான். ஒருநாளும் தமிழ் சினிமா பின்னோக்கி போகாது. ஒரு ஆர்.ஆர்.ஆர்., இப்ப வந்த கே.ஜி.எப்.-ஐ வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள்.

unknown node

அந்த காலத்திலே சந்திரலேகா எடுத்துள்ளனர். அந்த படத்திற்கு இணையாக ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபனுக்கு இணையாகவே, சமூக படைப்புகள், எளிய படைப்புகள் என தமிழ் சினிமாவின் படைப்புகளுககு ஈடு இணையே கிடையாது. அதனால், பின்தங்கியிருக்கிறோம் என்று மட்டும் கூறாதீர்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து தமிழ் சினிமாவை எடைபோட வேண்டாம். தமிழ் சினிமா என்றைக்கும் தலைநிமிர்ந்து இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.