தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். என்னதான் அவர் நீண்ட ஆண்டுகளாக படம் நடிக்காமல் கூட இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. அதற்கு உதாரணம் மாநாடு வெற்றியை கூறலாம்.
unknown nodeஇவரது நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் மஹா. இது ஹன்ஷிகாவின் 50-வது திரைப்படமாகும். படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஒரு வழியாக நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeபடத்தில் சிம்பு நடித்தது என்னவோ கெஸ்ட் ரோலில் தான். ஆனால், அவரது ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்தால் படமே சிம்பு படம் போல் மாதிரி தெரிகிறது. அந்த அளவிற்கு படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeஇந்த நிலையில் படம் வெளியாவதை முன்னிட்டு மதுரையை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் மஹா படம் வெற்றிபெறுவதற்காக 1000 அடி நீளத்திற்கு பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரை மதுரையில் உள்ள ஒரு மிகப்பெரிய பாலத்தில் வைத்துள்ளனர். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeஇதுவரை எந்த தமிழ் நடிகருக்கும் இத்தனை அடி உயரத்தில் பேனர் வைத்ததே இல்லை. ஆனால், சிம்பு ரசிகர்கள் முதன் முறையாக 1000 ஆதி பேனர் வைத்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.
unknown node