234 தொகுதியும் சைலண்டா இருக்கணும்! 2021-ல் நாங்க தான் இருக்கணும்! விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில்

234 தொகுதியும் சைலண்டா இருக்கணும். 2021-ல் நாங்க தான் இருக்கணும்.

சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதில், விஜய் கருப்பு நிற உடையுடன் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறுவது போன்று போஸ்டர் வெளியானது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள், அந்த போஸ்டரை வைத்து ஒரு சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில், 234 தொகுதியும் சைலண்டா இருக்கணும்! 2021-ல் நாங்க தான் இருக்கணும்! மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் மாண்புமிகு தளபதி விஜய் என குறிப்பிட்டிருந்தன. விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

unknown node