2 வாழை பழத்தின் விலை இவ்வளவா? விசாரணை நடத்த உத்தரவு!

பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் ராகுல் போஸ் .இவர் கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து உள்ளார்.இந்தி பட படப்பிப்புக்காக

பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் ராகுல் போஸ் .இவர் கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து உள்ளார்.இந்தி பட படப்பிப்புக்காக சண்டிகர் சென்று உள்ளார்.

அங்கு மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார்.அந்த ஹோட்டலில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அந்த விடியோவில் ,நான் சண்டிகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளேன்.இங்கு இரண்டு வாழை பழத்தை  கேட்டேன்.அந்த பழத்திற்கான பில் வந்தது.

unknown node

அந்த பில்லில் இரண்டு வாழை பழத்தின் விலை ஜி .எஸ்.டி .யோடு ரூ.442.50 வந்து உள்ளது.இதற்கு தகுதியானவன் தானா என தெரியவில்லை என கூறி உள்ளார்.இந்த வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.மேலும் வரிவிதிப்பு ஆணையர் இது பற்றி விசாரணை நடத்த உத்திரவு விட்டு உள்ளார்.