பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா!டாப் 10-ல் எப்படி இடம்பெற்றது ?
உலக அளவில் மொத்த சொத்துகளின் அடிப்படையில் இந்திய ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
நியூ வேர்ல்டு வெல்த் என்னும் நிறுவனத்தின் அறிக்கைபடி 2017-ம் ஆண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த சொத்துகளின் மதிப்பு 64,58,400 கோடி டாலர்கள் ஆகும். அடுத்த இடத்தில் சீனா (24,80,300 கோடி டாலர்) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் (19,52,200 கோடி டாலர்), நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் (9,91,900 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்) மற்றும் ஆறாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. (8,23,000 கோடி டாலர்).

அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இருக்கின்றன.
கடந்த ஆண்டு இந்தியாவில் சொத்து மதிப்பு அதிகமாக உயர்ந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு முடிவில் 6,58,400 கோடி டாலர் என்னும் அளவில் இருந்த சொத்து மதிப்பு 2017-ம் ஆண்டு முடிவில் 25 சதவீதம் 8,23,000 கோடி டாலர் ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் 160 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2007-ம் ஆண்டு முடிவில் 3,16,500 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2017-ம் ஆண்டில் சர்வதேச அளவிலான சொத்துமதிப்பு 12 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயம் சீனாவின் சொத்துமதிப்பு 22 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
தனிநபர்களில் இந்தியாவில் ஒரு கோடி டாலருக்கு மேல் சொத்து உடையவர்களின் எண்ணிக்கை 3,30,400 ஆக இருக்கிறது. 100 கோடி டாலருக்கு மேல் சொத்து உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20,730 ஆக இருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்காவில் 50,47,400 நபர்களிடம் ஒரு கோடி டாலருக்கு மேல் சொத்து இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சொத்துவள மதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.