தங்கம் விலையில் மாற்றமில்லை... வெள்ளி விலை கிலோ ரூ.1,000 உயர்வு.!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக மாறாமல் விற்பனையாக, வெள்ளி கிலோ ரூ.1000 அதிகரித்துள்ளது.

Gold Price [file image]

சென்னை :தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக எந்தவித மாற்றமின்றி அதே விலைலயே விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.90க்கும், 1 கிலோ வெள்ளி விலை ரூ.90,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.91ஆக உள்ளது. அதேபோல் 1 கிலோ வெள்ளி விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.91,000க்கு விற்கப்படுகிறது.

unknown node

today gold price [File Image]சென்னையில் இன்றைய நிலவரப்படி (10.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.53,440க்கும், ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,080 ஆகவும், கிராமுக்கு ரூ.7,135 ஆகவும் விற்பனையாகிறது.