சென்னை :தங்கத்தின் விலை கடந்த 2-ந்தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களாக ஏற்ற இறக்கம் இன்றி ஒரே விலையில் விற்பனையாகி வந்தநிலையில், நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (07.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.53,440க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனையாகிறது.
unknown nodetoday gold price [File Image]அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,080 ஆகவும், கிராமுக்கு ரூ.7,135 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.89.50க்கும், கிலோவுக்கு ரூ.2,500 குறைந்து ஒரு கிலோ ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
