புதிய தோற்றத்துடன் களமிறங்குகிறது யமஹா எம்டி 15..!

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த

யமஹா நிறுவனம், தனது எம்டி 15 ரக பைக்குகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.

தற்பொழுது இந்த பைக், சிறிது மாற்றங்களுடன் வருகிறது.

யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

unknown node

இந்த எஞ்சின், அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய பிஎஸ்-4 எஞ்சின் 19 பிஎச்பி பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் நிலையில், செயல்திறன் சற்றே குறைவாக இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

unknown node

புதிய யமஹா எம்டி-15 பைக்கில் பிஎஸ்-6 எஞ்சின் தவிர்த்து, கூடுதலாக ஐஸ் புளூவ் வெர்மில்லியன் என்ற அட்டகாசமான புதிய வண்ணத் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வண்ணத்திலான எம்டி-15 பைக்தான் நேற்று நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

unknown node

இந்த புதிய பிஎஸ் -6 யமஹா எம்டி-15, ரூ.1.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பிஎஸ்-6 மாடலின் விலை ரூ.4,000 கூடுதல் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.