இந்த 4 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை!

வருகிற 30, 31 ஆகிய தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Rain

சென்னை : கடந்த ஆண்டு அக்.15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 3 மாதங்களாக நீடித்து வந்து நிலையில், நேற்றுடன் விலகியதாக வானிலை மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வருகிற 30ம் தேதி தென்தமிழகமான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், 31ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரம்:

இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்