இன்றும், நாளையும் மிக கனமழை இருக்கு! வானிலை மையம் அலர்ட்!!
வானிலை : தமிழகத்துக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்புள்ள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டும் இருந்தது. திடீர் காலநிலை மாற்றத்தால் ரெட் அலர்ட் வாபஸ் பெற்றப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும், ஜுன் 24, 25, 26 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், இந்த தேதிகளில் 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.