இந்த 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் 5 மாவட்டங்களின் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

rain

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதன்படி, நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (நவ.3) காலை 8.30 மணி வரை கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியில் 16செ.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் 5 மாவட்டங்களின் பட்டியலை சென்னை  வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்