சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது. தமிழ்நாட்டில் இன்று (நவ.13) முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு […]
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக, மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரிகள்), கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 […]
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 8.30 மணி முதல் இன்று (நவ.3) காலை 8.30 மணி வரை கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியில் 16செ.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (மதியம் 1 மணி வரை) […]
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மேலும், தமிழகத்திற்கு இன்றும், நாளையும் கனமழை பெய்யலாம் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்ததாக பகல் 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், […]
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் நாளையும் தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் பதிவிடுகையில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில […]
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நேற்று (15-10-2024) காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 5.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுது. இன்று (16-10-2024) காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் […]