ஆந்திராவில் மெர்சிடிஸ் மீது டிராக்டர் மோதியத்தில் 2 துண்டுகளாக உடைந்தது. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்!
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மீது மோதியதில் டிராக்டர் இரண்டு பகுதிகளாக உடைந்தது. விபத்துக்குள்ளான கார் மற்றும் டிராக்டரின், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், டிராக்டர் இரண்டு துண்டுகளாக உடைந்து கிடப்பதும், பென்ஸ் காரின் முன்பகுதி சேதமடைந்திருப்பதும் பதிவாகியுள்ளது.
மேலும், டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு சில காயங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், காரில் வந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
unknown node