ஆந்திரா : திருப்பதியில் திவ்யா என்கிற பெண் 2 லட்சம் மதிப்புள்ள நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். டாமி என்கிற இந்த நாய் டிசம்பர் 10-ஆம் தேதி இருவரை பார்த்து குறைத்த நிலையில், அந்த நாயை இரண்டு பேர் முதலில் கல்லை வைத்து எறிந்துள்ளனர். இருப்பினும் நாய் குறைத்ததை நிறுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இருவரும் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் திவ்யா திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் நடந்த […]
ஆந்திரப் பிரதேசம்: PSLV C-59 ராக்கெட் ஏவுதல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று (டிச.4) மாலை 4.08க்கு மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால், திடீரென கடைசி நேரத்தில், PROBA-3 சாட்டிலைட்டில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் PSLV C-59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது. Due to […]
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் ஓர் புயலை கிளப்பினார். இந்த விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா மாநில அரசு மீது […]
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, வத்சன் சக்ரவர்த்தி, ஆனந்தராஜ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் ஒரு ஃபேண்டஸி பீரியட் ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு […]
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். மேலும், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டின் கொழுப்பு , பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக மாநில ஆய்வு முடிவுகள் என்ற தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை உண்டாக்கின. இதனை அடுத்து, திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட […]
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். அதனைத்தொடர்ந்து, உணவுப்பொருள் ஆய்வுக்குழு ஆய்வு செய்ததில் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததை உறுதிப்படுத்தியது. சிக்கிய பரிதாபங்கள் சேனல் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதனை ட்ரோல் செய்யும் விதமாக யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் தங்களுடைய பரிதாபங்கள் சேனலில் […]
திண்டுக்கல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு விநியோகம் செய்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரில் திருப்பதியில் உள்ள கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தற்போது ஏழுமலையான் கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கலில் உள்ள ஏ.ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு […]
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த குற்றசாட்டை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்வைத்தார். முன்னாள் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் தான் இம்மாதிரியான செயல்கள் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, வெளியான மாநில ஆய்வுகளில் வெளியான தகவல்களின்படி, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி , பன்றி இறைச்சி கொழுப்புகள் ஆகியவை கலந்து இருந்ததாக தகவல்கள் […]
சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதனையடுத்து, உணவுப்பொருள் ஆய்வுக்குழு ஆய்வு செய்ததில் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததை உறுதிப்படுத்தியது. இந்த விவகாரம் பெரிதாகச் சர்ச்சையாக வெடித்த நிலையில், சினிமா பிரபலங்கள் சிலர் நகைச்சுவையாகப் பேசுவது போல் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக, மெய்யழகன் படத்தின் […]
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தின் புரொமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ‘சத்யம் சுந்தரம்’ எனும் பெயரில் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் ரிலீசாக உள்ளதால், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்வில் நடிகர் கார்த்தி , இயக்குனர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அங்குள்ள தொகுப்பாளர், […]
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய ஆந்திர மாநில ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டன. குறிப்பாக , லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்புகள் ஆகியவை இருந்ததாக கூறப்பட்டன. பக்தர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினரும் […]
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில், விலங்கின் கொழுப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில அரசும், இதற்கு சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என சில அரசியல் தரப்பினரும், ‘ஆளும் கட்சி தங்கள் செய்த தவறை மறைக்க போலியாக குற்றம் சாட்டுகிறது.’ என […]
ஆந்திர பிரதேசம் : மது பிரியர்களுக்கு குறைவான விலையில் மதுவை அளிக்கும் பொருட்டு ஆந்திர மாநில அரசு ‘புதிய மதுபான கொள்கை’-யை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.99யில் இருந்தே 180 மில்லி மதுபானம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து ஆந்திர மாநில அமைச்சர் கே.பார்த்தசாரதி கூறுகையில், மாநில முதலமைச்சர் சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவை புதிய மதுபான கொள்கைக்கு கையெழுத்திட்டுள்ளது. திருப்பதியை தவிர்த்து 12 மாவட்டங்களில் 3,736 சில்லறை மதுபான கடைகள் தனியார் விற்பனைக்கு […]
ஆந்திரா : கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் புதன்கிழமை மினி லாரி கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேவரப்பள்ளியில் சின்னைகுடம் சிலகா பகால பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முந்திரி கடலை ஏற்றிச் சென்ற மினி லாரி டி நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் இருந்து சென்றுகொண்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்காமல் இருக்க மினி லாரியை திருப்பியபோது எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் […]
ஆந்திரப் பிரதேசம் : ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சத்யவேடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் கோனேட்டி ஆதிமூலம் (Koneti Adimulam). இவர் மீது ஒரு பெண் பாலியல் புகாரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அது தொடர்பாக எனக்கூறி, இணையத்தில் ஒரு சர்ச்சை வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்திகளை பிக் டிவி எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி நிறுவனம் தங்கள் எக்ஸ் வளைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் […]
விஜயவாடா : அந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் உடமைகளையும் இழந்து தவித்து வரும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரவு பகல் பாராமல் களத்திற்கே நேரடியாக சென்று நிவாரண பணிகளை ஆய்வு செய்வது, […]
விஜயவாடா : கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தை அடுத்து, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை அளித்த 1 கோடி […]
விஜயவாடா : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த தொடர் கனமழையால் பல நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக, ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ஆந்திராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை, வெள்ளப்பெருக்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த விஜயவாடாவில் விடிய விடிய முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ஆய்வு மேற்கொண்டார். ஆந்திரா, […]
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் கொட்டித் தீர்த்த கனமழையால் விஜயவாடா உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. வயநாடு நிலச்சரிவு துயரம் மறைவதற்குள், ஆந்திரா தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. மேலும், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், […]
ஆந்திர பிரதேசம் : கிருஷ்ணா மாவட்டத்தில் ஓர் தனியார் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா வைத்து வீடியோக்கள் எடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஓர் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மாணவிகள் விடுதியில் உள்ள குளியறையில் ரகசிய கேமிரா வைக்கப்பட்டு அதன் மூலம் மாணவிகளின் வீடியோ பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலையில் சில மாணவிகள், விடுதி குளியலறையில் […]