பென்ஸ் கார் மீது மோதியதில் இரண்டு துண்டுகளாக உடைந்த டிரக்டர்..வைரலாகும் வீடியோ!

ஆந்திராவில் மெர்சிடிஸ் மீது டிராக்டர் மோதியத்தில் 2 துண்டுகளாக உடைந்தது. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்! ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மீது மோதியதில் டிராக்டர் இரண்டு பகுதிகளாக உடைந்தது. விபத்துக்குள்ளான கார் மற்றும் டிராக்டரின், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், டிராக்டர் இரண்டு துண்டுகளாக உடைந்து கிடப்பதும், பென்ஸ் காரின் முன்பகுதி சேதமடைந்திருப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், டிராக்டரை ஓட்டி வந்த … Read more

தந்தையின் ட்ராக்ட்டரை அபகரித்த உறவினர்..! டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து புகாரளித்த சிறுமி..!

தந்தையின் ட்ராக்ட்டரை அபகரித்த உறவினரை, டிஜிபி சைலேந்திர பாபுவிடம்  புகாரளித 14 வயது சிறுமி.  ஈரோடு மாவட்டம், வைராபாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தர்சனா. இவரது தந்தை  கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அவரது தந்தையின் டிராக்டரை, தனக்கு கடன் கொடுக்க வேண்டும் என பொய் சொல்லி, அவர்களது உறவினரான பூபாலன் என்பவர் டிராக்ட்ரை அபகரித்து வைத்துள்ளதாகவும், தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் தன்னை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து, 14 … Read more

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் – ராகுல் காந்தி!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு சென்ற ராகுல் காந்தி புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகளுடன் மத்திய அரசு பத்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அது பலனளிக்கவில்லை.  இந்நிலையில், … Read more

நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம்!!

வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரித்து நாடாளுமன்றத்துக்கு அருகே டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனுமதி பெற்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சூழலில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திடீரென நாடாளுமன்றம் வளாகம் அருகே சிவப்பு நிற டிராக்டர் ஓட்டி வந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார். இதில் காங்கிரஸ் … Read more

மத்தியப்பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் நேர்ந்த விபரீதம்..!-4 பேர் பலி..!-19 பேர் படுகாயம்..!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஏற்பட்ட விபரீதத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள விடிஷா மாவட்டத்தில் கஞ்ச் பசோடா என்ற பகுதியில் இரவு நேரத்தில் சிறுமி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்த கிணறு 50 அடி ஆழம் உடையது. மேலும், இந்த கிணற்றில் 20 அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் இருந்துள்ளது. இதனால் அந்த சிறுமியை காப்பாற்றுவதற்கு சிலர் கிணற்றில் குதித்துள்ளனர். மேலும், இந்த தகவலை தெரிந்துகொண்டு இப்பகுதிக்கு படையெடுத்த கிராம … Read more

இளையராஜா இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி.. சென்னை அணி வெளியிட்ட வீடியோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி டிராக்டர் ஊரும் விடியோவை வெளியிட்டுள்ளது. தற்பொழுது அந்த வீடியோ, ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு தவறாமல் நடக்கும் ஐபிஎல் தொடர், இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வீட்டிலே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் … Read more

விவசாயிகளுக்கு அதிக அம்சங்களுடன் களமிறங்கும் மஹிந்திரா XP பிளஸ் சீரிஸ் டிராக்டர்.!

மஹிந்திரா நிறுவனம் இந்த வருட புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, குறைந்த எரிபொருள் தேவை, சிறந்த நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்த வருட புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த செயல்திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனம் கொண்டதாக விவசாயிகளின் ஏற்றவாறு இந்த புதிய மாடல் டிராக்டர். இன்றைய விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, … Read more

பெற்ற தந்தையை சொத்துக்காக டிராக்டர் ஏற்றி கொலை செய்த கொடூர மகன்.!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தந்தையை மகனே டிராக்டரை ஏற்றி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம். உடன்பிறந்த சகோதரிகளுக்கும் சொத்தை பிரித்து கொடுத்ததால் ஆத்திரத்தில் கொலையை அரங்கேற்றியவனை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அடுத்த முருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு 3 மகள்கள் 2 மகன்கள் என 5 பிள்ளைகள் உள்ளன. அவருக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை 3 ஏக்கர் வீதம் 5 பேருக்கும் சமமாக எழுதி வைத்திருக்கிறார். பின்னர் … Read more