அம்மா யானையிடம் கோபப்பட்டு ரோட்டில் அழுது புரளும் யானை குட்டி.. வைரலாகும் வீடியோ!
குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றே யானைகளும் புத்திசாலித்தனமான உயிரினங்கள். யானைகளும் மனிதர்களைப் போலவே சிக்கலான எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை.
யானைகள் என்றாலே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து விரும்பக்கூடிய விலங்குகளில் ஒன்று. அதிலும் யானைக்குட்டி என்றால் அவ்வளவுதான், அவை தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் வரம்பற்ற இன்பத்தை அள்ளித் தரக்கூடியது.
அந்தவகையில் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் ஒரு யானைக்குட்டி தனது தாயிடம் அடம்பிடித்து வரமறுத்து ரோட்டில் படுத்து உருளுவது பதிவாகியுள்ளது. இது இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
unknown node