இந்தோனேசிய சிறைகளில் இருந்து நில நடுக்கம், சுனாமியால் இடிந்த நிலையில் 1200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர்.இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 170 முறை நில அதிர்வும் ஏற்பட்டதால் பலு, டோங்கலா பகுதிகளை சுனாமி தாக்கியது.
unknown nodeஇதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்கை முடங்கி முழுவதும் பாதிக்கப்பட்டது.அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.மின்சாரம் , தொலைத்தொடர்பு வசதியின்மை காரணமாக மீட்பு பனி தாமதம் என்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
unknown nodeஅதேபோல் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.9-ஆக பதிவானது. இதைத்தொடர்ந்து அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அதே பகுதியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
unknown nodeஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் இந்தோனேசிய சிறைகளில் இருந்து நில நடுக்கம், சுனாமியால் இடிந்த நிலையில் 1200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். அங்கு உள்ள பலு மற்றும் டோங்கலா சிறைகளின் சுற்றுச்சுவர் இடிந்ததால், சிறைகளில் இருந்து ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பிச் சென்றனர்.