40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும்...தம்பிதுரை உறுதி...!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் தம்பிதுரை உறுதியாக கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் தம்பிதுரை உறுதியாக கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றது.இந்த விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி தனது கருத்தை கூறி இருந்தார்.இந்த நிலையில் இன்று அதிமுகவின் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.

சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியா கிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய  க்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம் என்று உறுதிபட தெரிவித்தார்.