சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில் “அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்லிக்கொண்டே இருப்பதற்கு பதிலாக கடவுள் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார். அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், பிற்பகல் 2 […]
டெல்லி : ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். ஏற்கனவே, இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி எம்பி சிவா, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இப்படி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் மசோதாவும் இன்று […]
டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதற்கு திட்டமிட்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னதாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை கொண்டு […]
சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், மத்திய அரசு நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு […]
சென்னை : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் இந்த […]
டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இதன் அடுத்தகட்ட நகர்வாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் […]
டெல்லி : வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது. புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஃபெஞ்சல் புயலால் அந்தந்த மாவட்டங்களில் வெகு வருடங்கள் கழித்து பேய் மழை பெய்துள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி மழைநீர் வெள்ளமாக ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் அளிக்க […]
டெல்லி: திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடளுமன்றத்தில் விமான டிக்கெட் உயர்வு குறித்து மக்களவையில் கோரிக்கை முன்வைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 23இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதற்கடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், […]
டெல்லி : 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்பிக்கள் 40 பேரும் தற்போது அடுத்தடுத்து பதவி ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டு வருகின்றனர். மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்ட பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டார். அடுத்து தமிழச்சி தங்கபாண்டியன், […]
கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு அடுத்தடுத்த நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு […]
நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனனவே மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையை பிரதமர் மோடி நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து இன்று 7வது நாள் கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடியதை […]
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவையில் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் காலணிகளுக்குள் மறைத்து வைத்திருந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் புகையை மக்களவைக்குள் தெளித்தனர். அவர்களை மக்களவை உறுப்பினர்கள் பிடித்து, பின்னர் பாதுகாவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மக்களவையில் நிறைவேறிய முக்கிய ‘தேர்தல்’ சட்ட மசோதா.! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.! இந்த பாதுகாப்பு […]
தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்ற உயர் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனால் அதனை மறுத்து, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது. புதிய சட்டதிருத்தத்தின் படி, தேர்தல் உயர் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில், பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் உடன் இந்திய தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சர் […]
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 33 மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இரண்டு பேர் மக்களவையில் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசி கோஷமிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாடாளுமன்ற பாதுகாப்பு கேள்விக்குறியானது. அதாவது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. அப்போது புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று 22ம் ஆண்டு நாடாளுமன்ற […]
நேற்று முன்தினம் (டிசம்பர் 13) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 22ஆம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்வையிட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். அவர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்து வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேற்கண்ட இருவரும் கர்நாடக மாநிலம் மைசூரு எம்பி பிரதாப் சிம்ஹா கையெழுத்திட்ட அனுமதிநுழைவு […]
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 22–ம் தேதிவரை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர். அதேபோல நாடாளுமன்ற வெளியே ஒரு பெண் உட்பட இருவர் வண்ண புகை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் காங்கிரஸ், திமுக […]
நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள் கிழமை முதல் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்தனர். கையில் வைத்து இருந்த மஞ்சள் நிற வண்ணப்புகை வீசும் ஒரு வகை பட்டாசை வீசினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. உடனே சுத்தரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவர்களை உடனடியாக கைது செய்து வெளியே […]
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதாவது நேற்று நடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர் கோஷங்களை எழுப்பி, தங்கள் கைகளில் இருந்த புகை குப்பிகள் வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது. இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் […]
நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர் கோஷங்களை எழுப்பி, தங்கள் கைகளில் இருந்த வண்ண புகை குப்பிகள் வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று, ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர். இந்த சூழலில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்த சமயத்தில் மைசூர் பாஜக எம்பியின் அனுமதி பெற்று பார்வையாளர்கள் அரங்கிற்கு வந்த ர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் திடீரென மக்களவை எம்பிக்கள் இருக்கும் பகுதியில் குதித்து விட்டனர். மேலும், மறைத்து வைத்து இருந்த வண்ண பூச்சிகளை வெளியே […]